ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு!
Thursday, October 3rd, 2024
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலால் வரவேற்கப்படாதவர் என அறிவித்துள்ள அந்த நாடு அவர் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கண்டிக்க தவறியதன் காரணமாக இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்கு எதிரானவர் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர், அவர் பயங்கரவாதிகளுகேகு ஆதரவளிக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் ஐக்கியநாடுகள் மீதான கறையாக குட்டெரெஸ் கருதப்படுவார் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது
000
Related posts:
இலங்கையில் நில அளவைப் பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை - அமைச்சர் கயந்த!
கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை!
சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்ப...
|
|
|


