ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வடகொரியாவிடம் சீனா வலியுறுத்து!
Thursday, March 9th, 2017
நெருக்கடி நிலையை தணிக்கும் வகையில், வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணு தொழில்நுட்ப சோதனைகளை இடைநிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
வடகொரியா தமது சோதனைகளை இடைநிறுத்தும் பட்சத்தில், அதற்கு ஈடாக வடகொரியாவை ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவினால் முன்னெடுக்கப்படும் கூட்டு இராணுவ பயிற்சிகள் நிறுத்தப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் வோங் யீ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டதிட்டங்களையும், பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா கடந்த திங்கட்கிழமை நான்கு ஏவுகணைகளை சோதனை செய்திருந்தது. குறித்த சம்பவத்தை அடுத்தே சீனா இக் கருத்தை முன்வைத்துள்ளது.வடகொரியாவின் குறித்த ஏவுகணை சோதனையை அடுத்து அமெரிக்கா தனது உயர் ரக ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு நிலைகளை தென் கொரியாவில் நிறுவி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
கச்சா எண்ணெய் தொடர்பான கருத்தை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் : ஈரான் எச்சரிக்கை!
காட்டுத்தீ - கலிபோர்னியாவில் 1 இலட்சம்பேர் வெளியேற்றம்!
தஞ்சம் கோருவோரின் தற்காலிக வதிவிட அனுமதி நீடிப்பு; பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி!
|
|
|


