ஏராளமான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று – அதிர்ச்சியில் வைத்தியர்கள்!
Wednesday, May 22nd, 2019
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஏப்ரல் 24ம் திகதி வரை ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் செய்யப்பட்ட இரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்றும், குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மட்டும் எப்படி பரவியது என விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
புலிகளின் தலைவர்களுக்கு ஐ.நா அகதி அடையாள அட்டை!
ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தார் ட்ரம்ப்!
2017 இல் மின்சாரம் தாக்கி நாடு முழுவதும் 106 பேர் சாவு!
|
|
|


