ஏமனில் விமான தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பலி!
Thursday, February 22nd, 2018
ஏமன் நாட்டின் சடா நகரில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமன் அரசுக்கும் ஹவுத்தி புரட்சிப் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த தாக்குதல்களால் இதுவரையில்பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சடா நகரின் எல்லைப் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த மக்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காரில் சென்ற 15 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடகொரியா -அமெரிக்கா சந்திப்பு இரத்து - கொரிய தீவகற்பத்தில் பதற்றம்!
சீனாவில் 27 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு - சீன வெளிவிவகார அமைச்சு !
வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
|
|
|


