எல்லையில் தவிக்கும் சிரிய அகதிகளுக்கு உதவ ஜோர்டான் இணக்கம்!

Monday, October 10th, 2016

ஜோர்டான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு இடையே இருக்கும் இராணுவம் அற்ற பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வழக்கமான உதவி விநியோகத்தை அனுமதிக்கப் போவதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு செய்தி தொடர்பாளர் மொகமத் மொமானி, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் க்ரேன் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் சிரியாவுடனான ஜோர்டான் எல்லை திறக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்; ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோர்டான் பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டதையடுத்து அந்த எல்லை ஜோர்டானால் மூடப்பட்டது.

தாக்குதலுக்கு பிறகு அந்த பகுதிக்கு ஒரே ஒரு உதவி வாகனத்தை மட்டுமே ஜோர்டான் அனுமதித்துள்ளது.

ஜோர்டான் மற்றும் சிரியாவிற்கு மத்தியில் இருக்கும் ரக்பன் குடியிருப்பில் 75,000 சிரியர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

_91746551_gettyimages-528405878

Related posts: