எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றும் ரஷ்யா !
Saturday, April 16th, 2022
எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றவிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மேற்காள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து, ரஷ்ய இறக்குமதிகளைக் குறைக்க ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
இதனால் ரஷ்யாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புத் தொடங்கியதும் எண்ணெய், எரிவாயு விலை உயர்ந்துள்ளதுடன், போர் காரணமாக ஏற்றுமதிகள் குறையும், அதனால் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் ரஷ்யா தனது எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றவிருப்பதாக ரஷ்ய அதிபரை மேற்காள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
000
Related posts:
அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்தவர் முகமது அலி!
டொனால்ட் டிரம்ப் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர் காங்கிரஸ் உறுப்பினர் சீற்றம்!
கடற்கரை மணலை எடுத்துச் சென்ற இருவருக்கு சிறை!
|
|
|


