எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தினகரனுக்கு நீதிமன்றக் காவல்!
Tuesday, May 2nd, 2017
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொலிஸ் காவல் முடிந்து டெல்லி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது அவரின் நீதிமன்ற காவலை மே 15 வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில் தினகரனை 5 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்
Related posts:
சிரியாவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி!
பெண்ணை கொன்று எரித்த பொலிஸ் உயர் அதிகாரி!
இலங்கைக்கு 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்னை கடத்த முயன்ற தமிழக அரசியல்வாதிகள் கைது!
|
|
|


