எண்ணெய்க் கசிவு – அவசரகால நிலையை அறிவித்தது குவைட் எண்ணெய் நிறுவனம்!

Monday, March 20th, 2023

குவைட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு காரணமாக குவைட் எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

குவைட் எண்ணெய் நிறுவனம் இன்று அதிகாலைமுதல் அவசரகால நிலையை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய்க்கசிவு காரணமாக எவ்வித காயங்களோ அல்லது உற்பத்திக்கு தடையோ ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கசிவானது தரைப்பகுதியில் ஏற்பட்டுள்ள போதிலும் குடியிருப்புக்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய குவைட் அரசாங்கம் மேற்கு பகுதிக்கு குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளதோடு, கசிவினை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: