எகிப்து எயார் விமானத்தில் குண்டுப்புரளி!

Thursday, June 9th, 2016

எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து சீனாவின் பீஜிங் நக­ருக்கு புதன்­கி­ழமை பய­ணத்தை மேற்கொண்ட எகிப்­து­ எயார் விமா­ன­மொன்று குண்டுப் புரளி கார­ண­மாக உஸ்பெகிஸ்தானில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது

118 பய­ணி­க­ளு­டனும் 17 விமான ஊழி­யர்­க­ளு­டனும் பய­ணித்த எயார்பஸ் ஏ330–-220 விமானமே இவ்­வாறு உர்கென்ச் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரையிறக்கப் பட்டுள்ளது

தொடர்ந்து விமா­னத்­தி­லி­ருந்த அனை­வரும் வெளி­யேற்­றப்­பட்டு அந்த விமா­னத்தில் குண்டு எதுவும் இருக்­கி­றதா என தேடுதல் நடத்­தப்­பட்­டது. எனினும் அந்த விமா­னத்தில் குண்டு எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை

3 வாரங்­க­ளுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லி­ருந்து கெய்ரோ நக­ருக்கு 66 பேருடன் பய­ணித்த எகிப்து எயார் விமானமொன்று மத்தியதரைக்கடலில் மர்மமான முறையில் விழுந்து மூழ்கியிருந்தது

Related posts: