ஊழல் குற்றச்சாட்டுக்காக 3லட்சம் பேருக்கு தண்டனை!

சுமார் மூன்று லட்சம் அதிகாரிகள் சீனாவில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் தண்டிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இவர்களில் இரண்டு லட்சம் பேருக்கு, குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்றையவர்களில் 82 ஆயிரம் பேருக்கு எதிராக கடுமையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அதிபராக ஸீ ஜின்பிங் 2013ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து அந்நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஊழலுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் முக்கியஸ்தர்கள் சிலரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, ஊழலுக்கு எதிரான இந்த நடவடிக்கை என்பது அதிபரின் ஸீ ஜின்பிங்கின் அதிகாரத்தைக் குவிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் பலர் கருதுகின்றனர்.
Related posts:
சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!
கொரோனா அச்சுறுசத்தல்: 21 நாட்கள் முடங்கும் இந்தியா - பிரதமர் மோடி எச்சரிக்கை!
ஈடு செய்ய முடியாத இழப்பு - பிரித்தானிய மகாராணி மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல...
|
|