உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் மக்கள் பாவனைக்கு!

உலகின் மிகவும் உயரமான பாலம் தென்மேற்கு சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் மேல் 570 மீற்றர் உயரத்தில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக பாலம் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 200 அடுக்கு மாடி கட்டடங்களின் உயரத்தில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெய்பான்ஜியங் பாலமானது சீனாவின் தென் மேற்கு மாகாணங்களான யுனான் மற்றும் குளோகு ஆகிய மாகாணங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
குளோகு மாகாணத்தின் போக்குவரத்து அதிகார சபை இந்த பாலத்தை பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கின்றது.2013 ஆம் ஆண்டில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலத்தில் 1341 மீற்றர் நீளமான இணைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
Related posts:
மியான்மரில் நிலநடுக்கம்!
கருங்கடலில் எரிவாயு குழாய்களை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
தடுப்பூசி ஏற்றாவிட்டால் தொலைபேசி துண்டிப்பு – சம்பளமும் இரத்து !
|
|