உலகின் செல்வாக்குமிக்கவர் விபரம் வெளியானது!

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, போப் பிரான்ஸிஸ், ஹிலரி கிளின்டன், ஆங் சான் சூ கி, பராக் ஒபாமா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதுடன், டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
மேலும், சானியா மிர்சா, சுந்தர் பிச்சை, ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன், சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சச்சின் பன்சால்- பின்னி பன்சால் ஆகிய இந்தியர்களும் இடம்பிடித்துள்ளார்கள்
Related posts:
அருணாசலபிரதேச மாநிலத்திற்குள் சீன இராணுவம் அத்துமீறி நுழைவு!
ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பா விரையும் கனடா பிரதமர்!
தென்கொரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து - பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பலி!
|
|