உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் யார்? – கில்கிறிஸ்ட் எதிர்வு கூறல்!

Monday, September 19th, 2016

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸடார்க், தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோர்தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரராகவும் திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். 44 வயதாகும் இவர், தனது துடுப்பாட்டத்தால் உலக பந்து வீச்சாளர்களை அச்சம் அடைய வைத்தனர். கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க், நீண்ட வருடங்களாக தொடர்ச்சியாக சிறந்த வகையில் பந்து வீசி வரும் டேல் ஸ்டெயின் ஆகியோர்தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மிட்செல் ஸ்டார்க்தான் சிறந்த பந்து வீச்சாளார். அப்படி டாப் பந்து வீச்சாளராக இல்லாவிடிலும்,  மிகச்சிறந்த டாப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார்.

நீண்ட கால காயத்தில் இருந்து மீண்டு வந்த டேல் ஸ்டெயின், மிகவும் அபாரமாக பந்து வீசுகிறார். இந்த தலைமுறையின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் அவரைப்போல் ஆக வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் ஸ்டெயினைப்போல் நீண்ட காலம் விளையாட வேண்டும் ஆசைப்படுவார்கள். எந்தவொரு சாம்பியனுக்கு நீண்ட நாட்கள் விளையாடுவது மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

12 வருடங்களாக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஸ்டெயின் 416 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 463 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Untitled-1

Related posts: