உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி: புடின் அறிவிப்பு!
Monday, August 29th, 2022
உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்டபகுதியில் இருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0000
Related posts:
சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!
பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் -அச்சத்தில் மக்கள்!
இராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மேன்முறையீடு!
|
|
|


