உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!
Sunday, February 26th, 2023
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் ஜேர்மனிக்கு இடையில் காற்றாலை, சூரிய ஒளி திட்டம் என பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா வைரஸ் - அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!
சட்ட அமைப்பில் 100 பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த தயார் - நீதி அமைச்சர் அறிவிப்பு!
திறக்கப்படாத எஞ்சிய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அடுத்தவாரம்முதல் மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர்...
|
|
|


