ஈரான் விமானத்தள பயன்பாட்டை ரஷ்யா நிறுத்தியது!

Tuesday, August 23rd, 2016

சிரியா மீது தாக்குதல் நடத்த ஈரானின் விமானத் தளத்தை பயன்படுத்துவதை தாற்காலிமாக நிறுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தெக்ரானில் உள்ள ரஷ்யா தூதர், ரஷ்யா தனது உபகரணங்களை தற்போது விலக்கிக் கொண்டாலும், எதிர்காலத்தில் ஈரானின் விமானத்தளத்தை பயன்படுத்த ரஷ்யாவிற்கு எந்த தடையையும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரானின் பாதுகாப்புதுறை அமைச்சர் ஹுசைன் டெகான், ஈரானின் விமானத் தளத்திலிருந்து ரஷ்யா செயல்படுவது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். சிரியாவில் நடந்த போரில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளும் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு ஆதாரவு அளித்தன. ஆனால் ஈரான் அந்த போரில் தனது பங்கு குறித்த குறைந்த தகவல்களையே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: