ஈரானுக்கு 50 ஆண்டு பொருளாதார தடை – உக்ரைன் அதிரடி நடவடிக்கை!
Monday, May 29th, 2023
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் அரசாங்கம் விதித்துள்ளது.
இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்து தெரிவித்தார்.
அப்போது இந்த சட்டமூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்கிறது என அவர் கூறினார்.
மேலும் உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில் நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுவதற்கு தடை விதிக்க இந்த சட்டமூலம் வழிவகை செய்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ரஷ்யா மற்றும் ஈரானில் உள்ள 141 சட்ட நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உக்ரைன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


