இலங்கைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு!

இலங்கை விமானம் திருச்சியிலிருந்து புறப்படும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததால் பயணம் இரத்துசெய்யப்பட்டு பயணிகள் மாற்று விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி-இலங்கை இடையே நாள்தோறும் இருவேளையும் ஸ்ரீலங்கன் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் சனிக்கிழமை காலை 9.25 மணிக்கு 146 பயணிகளுடன் இலங்கை புறப்படத்தயாரானது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு அருகில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, எலிவேட்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையில் கொழும்பு சென்ற மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related posts:
சிரியாவில் தாற்காலிக யுத்த நிறுத்தம்!
நேட்டோ அமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - ட்ரம்ப்!
3 அமெரிக்க சிறப்பு கொமாண்டோ வீரர்கள் படுகொலை!
|
|