இரட்டைக்கோபுர தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு காலம் நீடிப்பு!

Friday, July 26th, 2019

2001 செப்டம்பர் 11 இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி வழங்கலை மேலும் நீடிப்பதற்கு செனட் சபை அங்கீகாரமளித்துள்ளது.

இதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் 97 க்கு 2 என்ற அடிப்படையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக குறித்த நிதியமானது சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளது.

இதற்கமைய அந்த நிதியத்தில் புதிய இழப்பீடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகளை 2020 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியளவில் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்து. எனினும் குறித்த இழப்பீட்டு நிதியத்தை நீடிப்பதற்கு அமெரிக்க செனட் சபை அங்கீகாரமளித்துள்ளது.

Related posts: