இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா – இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்கள் ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!
Tuesday, November 7th, 2023
40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தலும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிற நிலையில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரு மாநிலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து இவ்விழாவில் பங்குபெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்கள் ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Related posts:
அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!
நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடத்த முடிவு - நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவி...
ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் - ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
|
|
|


