இந்தோனோசியாவில் இருந்து புறப்பட்டுச் விமானம் விபத்து?

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று(29) காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச் சென்ற JT610 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானமானது, ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அது கடலில் விழுந்துள்ளது என ஊடக பேச்சாளர் லதீப் யூசுப் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!
தூதரகத்தை மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் -நோர்வே அரசாங்கம் இலங்கை பிரதமரி...
கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கின்றேன் - சர்வதேச நாணய நிதியத்தின் முகாம...
|
|