இந்தோனேசிய நிலநடுக்க உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு!

Tuesday, November 22nd, 2022

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 5.6 ரிச்டர் அளவான வலுவான நிலையில் பதிவாகியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 300க்கும் அதிகமானோர் காயமாடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சியான்பூர் பகுதி நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts: