இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் : 82 பேர் உயிரிழப்பு!
Monday, August 6th, 2018
இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 82 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் இதன் தாக்கம் கடுமையாக உணரப்பட்டதுடன், இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
பாகிஸ்தானின் பிரதமராவது தான் லட்சியம் - மலாலா !
நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் தனுஷ் !
கமல் ஹாசனின் சகோதரர் காலமானார்!
|
|
|


