இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏழு பேர் உயிரிழப்பு – நூற்றுக்கணக்கானோர் காயம்!
Friday, January 15th, 2021
இந்தோனேசியாவின் சுலவேசி தீவை உலுக்கிய பலத்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன்போது வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், அச்சம் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அத்துடன் நிலச்சரிவுகளைத் தூண்டிய இந்த நிலநடுக்கத்தினால் பல வீடுகள் அழிந்தன.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மஜெனே நகரிலிருந்து வடகிழக்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
நாட்டின் பேரழிவு தணிப்பு அமைப்பின் ஆரம்ப அறிக்கைகள் நான்கு பேர் இறந்துவிட்டதாகவும், 637 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தன. தற்போது அண்டை பகுதியில் உள்ள மாமுஜூவில் மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதே போல் பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


