இந்திய மக்களவைத் தேர்தல் – ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 7 கட்டங்களில் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Sunday, March 17th, 2024

இந்தியாவில் இந்த வருடத்துக்கான மக்களவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறவுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழக அரசியல் கட்சிகள் ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: