இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் – பல்வேறு நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவிப்பு!
Tuesday, June 20th, 2023இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கும்போது, ஏனைய நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்பதால் இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி குறித்த பயணத்தை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஜூன் 22 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சுற்றுப்பயணத்தில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையிலும் பிரதமர் உறையாற்றவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


