இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால் நடவடிக்கை: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!

பாகிஸ்தானில், அடுத்த வாரத்திற்கு பின்னர் இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால், அந்த ஒளிபரப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
சமீபமாக இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக அனைத்து இந்திய தொலைக்காட்சிகளும் பாகிஸ்தானில் தடை செய்யப்படும் என்று முன்னதாக பாகிஸ்தான் ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியிருந்தது.
இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் பிரபலம் காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட காஷ்மீர் பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பதற்ற நிலையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் 18 இந்திய படையினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இந்த நிலை இன்னும் மோசமாகியது.
Related posts:
|
|