இந்தியா  பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து துவம்சம்.. ! தீவிரவாத முகாம்கள் பல காலி!

Thursday, September 29th, 2016
பாகிஸ்தான் எல்லையில் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழித்து தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் பலர் கொன்று குவிக்கப்படதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம், யூரியில் சமீபத்தில், அதிகாலை வேளையில் தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கோழைத்தனமான தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் கோபமடைந்த இந்தியா, தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி தர தயாரானது. பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் தொடர் ஆலோசனைகளை நடத்தி வந்தனர். சார்க் மாநாட்டை புறக்கணித்த இந்தியா, அடுத்தகட்டமாக ராணுவ நடவடிக்கைக்கும் தயாராகி வந்தது. இந்திய உளவுத்துறை மூலம், பாகிஸ்தான் எல்லை பகுதியில் எங்கெல்லாம் தீவிரவாதிகளின் முகாம் இருக்கிறது என்பதை இந்தியா உளவு பார்த்து வந்தது
உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில், நேற்று இரவில் இந்திய விமானப்படை, தைரியமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை சரமாரியாக வீசியது. இந்த அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தனர். தீவிவாதிகளுக்கு பயிற்சி அளிக்க அங்கு வந்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்ட தகவலை அந்த நாடும் உறுதி செய்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று ரன்பீர் சிங் இன்று டெல்லியில் அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் 20 முறை தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டனர். அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது என்றார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தினால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மோடி அரசு அமைந்த பிறகு வட கிழக்கு மாநிலங்களில் அட்டகாசம் செய்த தீவிரவாதிகளை ஒழிக்க, இந்திய ராணுவம் மியான்மர் நாட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. அதேபோன்ற ஒரு தாக்குதலை பலம் பொருந்திய பாகிஸ்தான் மண்ணிலும் செய்து காட்டியுள்ளது வீரம் மிக்க இந்திய ராணுவம். 1999ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட கார்கில் போரின்போது பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவம் புகுந்து அடித்தது. அதன்பிறகு இப்போதுதான் முதல் முறையாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

indian-army4554-29-1475133549

Related posts: