இந்தியாவை மையமாக கொண்டு புதிய பொருளாதார கட்டமைப்பு திட்டத்தை தீட்டுகிறார் ரஷ்யா அதிபர் புடின்!

Thursday, August 4th, 2022

இதுவரைகாலமும் ஐரோப்பிய சந்தையுடன் தனது பொருளாதார கட்டமைத்து மேற்கொண்டுவந்த ரஷ்யா அதேபோன்றதொரு கட்டமைப்பை இந்தியாவை மையமாக வைத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் தற்போதைய முக்கிய வர்த்தகக் கூட்டணி நாடுகளாக இருப்பது சீனா, இந்தியா, ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் இதர சிறு மற்றும் நடுத்தரச் சோவியத் நாடுகள் தான். இதிலும் குறிப்பாக இரு தரப்பும் அதிகப்படியான இலாபத்தையும், வர்த்தகத்தையும் அடைய கூடிய வகையில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஓரே வர்த்தகச் சந்தை இந்தியா என்பதால் பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி வருகிறது ரஷ்யா.

ரஷ்யா கடந்த 10 வருடத்தில் ஐரோப்பா மத்தியில் கட்டமைக்கப்பட்ட கனெக்டிவிட்டி, கேபிட்டல் மார்கெட்ஸ், பைனான்சியல் இன்பராஸ்டக்சர் ஆகியவற்றைத் தற்போது இந்தியா உடன் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யா – இந்தியா மத்தியிலான வர்த்தகம் 120-150 பில்லியன் டொலர் வரையில் உயரும் என ரஷ்யாவின் அலுமினிய தொழிலதிபரான Oleg Deripaska தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக ரஷ்யா தனது பொருளாதாரத்தை ஐரோப்பிய சந்தையை நம்பி தான் கட்டமைத்து வந்தது. இதனால் தற்போது ரஷ்யா – ஐரோப்பியா மத்தியிலான வர்த்தகம் 750 பில்லியன் முதல் 1 டிரில்லியன் டொலராக உள்ளது என Oleg Deripaska தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது உக்ரைன் மீதான போரின் காரணமாக அறிவித்த பொருளாதார தடையால் இரு தரப்பு வர்த்தகமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.

தற்போது இதேபோன்ற கட்டமைப்பை ரஷ்யா இந்தியா உடன் இணைக்கத் திட்டமிட்டு வருகிறது. மேலும் Oleg Deripaska ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: