இந்தியாவிடம் குற்றவாளிகளை ஒப்படையுங்கள் – பிரதமர் மோடி !

பொருளாதாரக் குற்றம் இழைத்துவிட்டு லண்டனில் பதுங்கி உள்ளவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜி-20 மாநாட்டிற்கிடையில் ஹம்பர்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே யை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 9500 கோடி வரை மோசடி செய்துவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையா மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் 470 கோடி ரூபாய் வரை மோசடி செய்த லலித்மோடி ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் இங்கிலாந்தின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார்.
அத்துடன் இச்சந்திப்பிற்கு முன்னர் இத்தாலி பிரதமர் வியட்நாம் பிரதமர் உள்ளிட்டோரையும் மோடி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடகொரியா மீது தென்கொரியா புகார்!
ஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டம்!
சீனாவின் 'டியன்வன்௲1' செவ்வாயில் தரையிறங்கியது!
|
|