இத்தாலி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது : 100 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்!

மத்தியதரைக்கடலில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படைக் கப்பலும், இரண்டு வர்த்தகக் கப்பல்களும் விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
ஆனால், நான்கு பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்துள்ளது. 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்திற்குள்ளான படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்துள்ளதால் 100 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கிப் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இல்லை.
Related posts:
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்!
இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடிப்பு - 20 பேர் உயிரிழப்பு!
உலகை அச்சுறுத்தும் கொரோனா: ஏப்ரல் இறுதிவரை சமூக இடைவெளித் திட்டம் நீடிப்பு - அமெரிக்க ஜனாதிபதி!
|
|