இத்தாலியில் காட்டுத்தீ!

Tuesday, July 18th, 2017

இத்தாலியின் எல்லை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.இதேவேளை கடந்த 10 ஆண்டுகளில் இம்முறையே தீயணைப்பு பணிக்கான அவசர விமானங்களுக்கான கோரிக்கை அதிகமாகக் காணப்படுவதாக இத்தாலி சிவில் பாதுகாப்பு நிறுவனமொன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் தென் பிராந்தியங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியசாக அதிகரித்துள்ள அதேவேளை இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களில் ஒன்றான நேப்பிள்ஸ் கடும் புகை மூட்டத்துடன் காட்சியளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வட பிராந்தியங்களான பர்மா மற்றும் பியாசெனா ஆகிய பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளமையால் அங்கு அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தவும் அரசாங்கம் தூண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: