இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாபமாக பலி!
Friday, August 13th, 2021
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத் தாக்குதலையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Related posts:
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை விரைவில்!
ட்விட்டர் நிறுவனரின் கணக்கு ஹெக் செய்யப்பட்டது!
யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை - போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவ...
|
|
|


