ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு துருக்கியில் தடுப்புக் காவல்!
Wednesday, July 26th, 2017
சிறையிலடைக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய 47 பேர், துருக்கி பொலிஸாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம், துருக்கித் தலைநகர் அங்காராவில் நேற்று (25) நடத்தப்பட்டுள்ளது. 35 மற்றும் 28 வயது மதிக்கத்தக்க ஆசிரியர்களே இரண்டு மாதங்களுக்கு முன்னர், மேற்படி சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் துருக்கியில் முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியர்கள் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதற்கு அதிருப்தியை தெரிவிக்கும் வகையிலேயே அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
டொனால்ட் டிரம்பிற்கு சிக்கல்!
படகு விபத்து: சினாவில் 17 பேர் உயிரிழப்பு!
வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன!
|
|
|


