ஆடையில் வெள்ளைத் துணி அவசியம் – ரஷ்ய இராணுவம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
Saturday, April 23rd, 2022
ஆடையில் வெள்ளைத்துணியை கட்டியிருக்காவிட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் இதனை அணிந்து கொண்டு தாங்கள் இராணுவத்தினர் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீதான தனது படையெடுப்பில் தற்போதுவரை மிக ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தாமல் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்ய இராணுவம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இங்கு உக்ரைன் இராணுவமும் மரியுபோல் நகரை மீட்பதற்கு சண்டையிட்டு வருகின்றது.
இதனால் பொதுமக்கள் யார், இராணுவத்தினர் யார் என்ற குழப்பம் ரஷ்ய இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது ஆடையில் வெள்ளை துணியை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், வெள்ளை துணி இல்லாதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


