அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ!
Tuesday, April 17th, 2018
அவுஸ்திரேலியா சிட்னியின் தென் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பணியில் தற்போது நூற்றுக்கணக்கான தீயணைக்கும் படை தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்தக் காட்டுத் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவலாம் என அச்சம்வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பிராந்தியத்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வீடுகள் ஏற்கனவே பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அவுஸ்திரேலியாவின் காலநிலை அசாதாரண வெப்பநிலையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மலேஷியாவில் கடும் வெப்பம், 2 மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டது!
இந்தியா - தென்கொரியாவுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
அணுசக்தி திறன் கொண்ட தண்ணீருக்கு அடியில் செல்லும் ஆளில்லா விமானத்தை பரிசோதித்தது வடகொரியா!
|
|
|


