அயர்லாந்து அரசாங்கம் எல்லையை உருவாக்காது அயர்லாந்து!
Sunday, July 30th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகும் போது, அயர்லாந்து அரசாங்கம் எல்லை ஒன்றை உருவாக்காது என பிரதமர் லியோ வராத்கர் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வென்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்திற்கு வடக்கு அயர்லாந்தில் உள்ள தொழிற்சங்கவாதிகள் கோபம் கொள்ள மாட்டார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் எதிர்வரும் வாரம் வடக்கு அயர்லாந்திற்கு விஜயம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஏர் கனடா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த பிரான்ஸ் தம்பதி!
நிலநடுக்கம்- பிலிப்பைன்ஸ் 5 பேர் உயிரிழப்பு!
ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!
|
|
|


