அமெரிக்க டொலர்களை சேமிப்பதற்கு புடினின் தீர்மானம் உதவியது – ட்ரம்ப்

Saturday, August 12th, 2017

ரஷ்யாவில் பணியாற்றி வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

நியூ ஜேர்சியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது அமெரிக்காவால் புதிய தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என அண்மையில்  புடின் உத்தரவு விடுத்தார்.

அத்துடன், இம்மாத முதலாம் திகதி முதல் அமெரிக்க இராஜதந்திரிகளால் பயன்படுத்தப்பட்ட பண்டகசாலை மற்றும் விடுமுறைச் சொத்துக்கள் என்பனவும் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவத்த ட்ரம்ப்புடினின் குறித்த தீர்மானத்தின் மூலம் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடிந்ததுஎன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: