அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விவகாரம்: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை தொடர்பில் 13 ரஷ்யர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகமாக எவ்.பி.ஐ இன் விசாரணைகளில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்திருந்தாக முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள விசேட ஆலோசகர் ரொபர்ட் முல்லர் (Robert Mueller) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளான 13 ரஷ்யர்களுள், 3 பேர் ஏற்கனவே மோசடி குற்றச்சாட்டுகளுக்கும், ஐந்து பேர் வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களாவர்.
இதேவேளை, ரஷ்யாவின் மூன்று நிறுவனங்களும், குறித்த விடயத்தில் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
|
|