அமெரிக்கா கருத்திற்கு இஸ்ரேல் அதிபர் கடும் கண்டனம்!

Thursday, December 29th, 2016

Bottom of Form – பாலத்தீனிய விவகாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலரான ஜான் கெர்ரியின் பேச்சு பக்க சார்புத்தன்மை கொண்டவையாக இருப்பதாக கூறி இஸ்ரேல் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கான தீர்வு குறித்த ஒரு சமாதான உடன்படிக்கையின் வாய்ப்பானது பெரும் ஆபத்தில் இருப்பதாக கெர்ரி தெரிவித்துள்ளார்.ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இஸ்ரேலிய குடியிருப்பு கட்டடங்களை கட்டுவது என்பது ஒரு பெரிய பிரச்சினை என்று கூறியுள்ளார்.

கெர்ரியின் பேச்சு தனக்கு அதிருப்தி தருவதாகவும், குடியேற்றங்கள் மீது நிலையற்ற மற்றும் அதிக கருத்தூன்றி கவனம் செலுத்துவதாகவும் நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக பாலத்தீனத்தின் முரட்டுத்தனமான பயங்கரவாத பிரசாரத்தை அடக்குவதாக கெர்ரி சொல்லி இருந்தார் ஆனால் அதற்காக அவர் எதையுமே செய்யவில்லை என்று கடுமையாக சாடியிருக்கிறார் நெதன்யாகூ.

இதுகுறித்து மேலும் பேசுகையில், இஸ்ரேலின் உரிமைகள் நீடித்திருக்கக்கூடிய அங்கீகாரத்தை பாலத்தீனியர்கள் மறுத்து வருவதை மையப்படுத்தியே இந்த மோதல் இருப்பதாகவும், ஆனால் இந்த யதார்த்த உண்மை மீது கெர்ரி கவனம் செலுத்தவில்லை என்றும் நெதன்யாகூ கூறியிருக்கிறார்.

_93164402_gettyimages-453718749

Related posts: