அமெரிக்காவை தாக்குவோம்- ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்!

Wednesday, June 29th, 2016

ஐ.எஸ். தீவி­ர­வாதிகள் அமெ­ரிக்­கா­வுக்குதாக்­கு தல் அச்­சு­றுத்தல் விடுக் கும் புதிய காணொளிக் காட்சி­யொன்றை வெளியிட்­டுள்­ளனர்.

அந்தக் காணொளிக் காட்­சியில் அமெ­ரிக்க சான் பிரான்­சிஸ்கோ மற் றும் லாஸ் வெகாஸ் பிராந்தியங்­க­ளி­லுள்­ள முக்­கிய இடங்கள் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­துடன் அந்தக் காணொளிக் காட்­சியில் அமெ­ரிக்க ஒர்­லாண்டோ பிராந்­தி­யத்தில் தன்னினச்சேர்க்கை­யா­ளர்­க­ளுக்­கான இரவு விடு­தியில் தாக்­கு­தலை நடத்தி 49 பேரைக் கொன்ற துப்பாக்­கி­தா­ரி­யான ஓமர் மதீ­னுக்கு தீவி­ர­வா­திகள் பாராட்டுத் தெரி­விப்­பதை வெளிப்­ப­டுத்தும் காட்சியும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தது.

மேலும் அந்த 9 நிமிட காணொளிக் காட்­ சியில் பராக் ஒபாமா தோன்றும் காட்­சி­யொன்றின் பின்னணியில் குருதி வழிந்­தோடும் தோற்­றப்­பாடு காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்ந்து அவரும் பிரான்ஸ் ஜனா­தி­பதி தோன்றும் காட்­சியில் அந்த இரு­வ­ரையும் சுற்றி தீ எரிவதாக காண்­பிக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி காணொளிக் காட்சி ஈராக்­கிய மொசூல் நக­ரி­லுள்ள தீவி­ர­வா­தி­களால் வெளியிடப்பட்டுள்ளதாக நம்­பப்­ப­டுவதாக செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் அமெரிக்காவுக்கு எதி­ராக தீவி­ர­வா­திகள் அச்­சு­றுத்தல் விடுப்­பது இது முதல் தட­வை­யல்ல என்­பது குறிப்­பி­டத்தக்­கது.

35BE13A700000578-3663447-image-a-3_1467100512405

35BE137800000578-3663447-image-a-2_1467100503181__1_

Related posts: