அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி
Sunday, June 6th, 2021
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இண்டியனா மாகாணத்தின் தலைநகரான இண்டியனாபொலிஸ் நகரத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த பொலிசார், காயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பொலிசா விசாரணை நடத்தி வருகின்றனர்.
000
Related posts:
நேபாளத்தில் கோர விபத்து பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்!
ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
|
|
|


