அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!
Friday, June 22nd, 2018
அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது.
அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று அதிகரித்த வரியை அறவிடவுள்ளது.
முன்னதாக அலுமினியம் மற்றும் இரும்பு ஆகிய பொருட்களுக்கு 25 சதவீத மற்றும் 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறவிட உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலாகவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இதன்படி அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மதுபான பொருட்கள், உந்துருளிகள் மற்றும் குடிபானங்கள் என்பவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் வரியை அறவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காணாமல் போன மலேசிய விமானம் MH 370 பற்றி வெளியான புதிய தகவல்!
அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை!
சந்திரனில் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர் - புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை!
|
|
|


