அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? நவம்பர் 8 தேர்தல்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் மிகப் பெரிய சக்தியாக அங்கு வாழும் இந்தியர்கள் விளங்குகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஹிலரி கிலின்டனும் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்தியர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இரு வேட்பாளர்களும் மும்முரமாக உள்ளனர். தற்போதைய நிலையில் ஹிலரி கிளிண்டனுக்கே பெரும்பாலான இந்தியர்கள் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக இந்தியர்களின் வாக்கு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைவாக அமெரிக்க வாழ் இந்தியர்களில் அதிகமானோர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல் ஒட்டுமொத்தமாக அமெரிக்க – ஆசிய நாட்டினரில் 55 சதவீதமானோர் ஹிலரிக்கு தங்களது ஆதரவைதெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|