அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது – அமெரிக்கா இணையதளம் தகவல்!
Saturday, May 7th, 2016
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை நடத்திக்காட்டி வருவது உலக அரங்கை அதிர வைத்து வருகிறது.
இந்த நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை கூடம் அமைந்துள்ள புங்கியே-ரி பகுதியில் கடந்த சில நாட்களாக வாகன நடமாட்டம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் அப்பகுதியில் நடமாட்டம் அதிகரித்த சில நாட்களில் வடகொரியா அணு ஆயுத பரிசோதனைகளை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்காவின் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ஆளும்கட்சி மாநாடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் உலகுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மேலும் ஒரு அணுகுண்டு பரிசோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலுக்கு ஆதாரமாக வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள வீடியோ காட்சிகளை ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின்படி, வடகொரியா அணுகுண்டு பரிசோதனை நடத்தினால், சர்வதேச தடையைமீறி அந்நாடு நடத்தும் ஐந்தாவது அணுகுண்டு பரிசோதனையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அணு குண்டு சோதனைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடகொரியா முடித்துவிட்டதாகவும் எப்போது வேண்டுமானாலும் இந்த சோதனை நடத்தப்படலாம் என்று தென் கொரிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். மேற்கூறிய இடத்தில் அணு குண்டு சோதனை நடத்துவதற்கான செயல்பாடுகளை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாகவும் சோதனை நடத்தப்பட்டால், அது எங்களுக்கு ஆச்சர்யத்தை தராது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்ய.
Related posts:
|
|
|


