அகதிகள் வருகையால் திணறுகிறது கிரேக்கம்

Sunday, March 6th, 2016
குடியேறிகள் மற்றும் அகதிகள் வருகையை சமாளிக்க முடியாமல் கிரேக்கம் திணறிவருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றத்துக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் கிரேக்கம் மற்றும் இத்தாலியை தனித்து விட்டுவிடாமல், மொத்த ஐரோப்பிய ஒன்றியமுமே அணிதிரண்டு குடியேறிகள் நெருக்கடியை கையாள வேண்டும் என்று திமித்ரோஸ் அவ்ரமொபோலிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிரேக்கத்துக்கு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் குடியேறிகள் வரை வந்திறங்குவதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் பால்கன் நாடுகள் மற்றும் ஆஸ்திரியாவால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் அவர்களில் பலரால் வடக்கை நோக்கி பயணிக்க முடிவதில்லை.

கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்கக்கூடிய ஷெங்கன் பகுதிலிருந்து கிரேக்கத்தை நீக்க வேண்டும் என்ற சிலரது கருத்துக்கு பதில் தரும் விதத்தில் கிரேக்கத்தை சேர்ந்த அவ்ரமொபோலிஸின் இந்த கருத்து வந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

Related posts: