அகதிகள் முகாமை மூட அதிபர் முயற்சி!

Sunday, September 25th, 2016

பிரான்சின் வட பகுதி நகரான கலேயில், காடு என அழைக்கப்படும் குடியேறிகள் முகாமை மூடும் திட்டம் பற்றி பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் மேலும் பல விபரங்களை வழங்கியுள்ளார்.

பிரான்சில் மற்ற இடங்களில் உள்ள வரவேற்பு மையங்களில் சுமார் 9,000 இடங்கள் வழங்கப்படலாம் என்று ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.

அங்கே வந்த பிறகு, குடியேறிகள் தஞ்சம் பெற நான்கு மாத கால அவகாசம் வழங்கப்படும். அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்வார்கள்.

அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், குடிவரவு விவகாரம் , தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதால், இந்த முகாமை மூடுவதாக ஒல்லாந்து மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான குடியேறிகள் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைய ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், முகாமின் ஒரு பகுதி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

_91369284_a31127d6-c681-4ebf-ad34-a4ea297e317c

Related posts: