T -20 கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய அணியுடனான ரிருவன்ரி போட்டியில் வெற்றித்தொடரை கைப்பற்றிய இலங்கை அணியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி நாட்டிற்கு புகழை ஈட்டிக் கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அசேல குணரத்னவிற்கு விசேடமாக வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முகாமைத்துவ குழுவினருக்கும் பாராட்டுத்தெரிவித்துள்ளார்.
Related posts:
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை தடுமாற்றம்!
உபுல் தரங்க பாகிஸ்தானுடனான T - 20 தொடரில் இருந்து விலக முடிவு!
இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சி - இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெள...
|
|