7 இடதுகை துடுப்பாட்ட வீரர்களுடன் இங்கிலாந்து அணி!

Saturday, November 19th, 2016

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 7 இடதுகை துடுப்பாட்டவீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வை.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

* இந்த டெஸ்டில் இங்கிலாந்து ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 7 பேர் இடதுகை துடுப்பாட்டவீரர்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஒரு அணி 7 இடதுகை துடுப்பாட்டவீரர்களுடன் களம் காணுவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி 6 இடதுகை துடுப்பாட்டவீரர்களுடன் ஆடியதே அதிகபட்சமாக இருந்தது.

* அரியானாவைச் சேர்ந்த 26 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் அறிமுக டெஸ்ட் வீரராக அடியெடுத்து வைத்தார். கடந்த மாதம் இங்கு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் ஒரு நாள் போட்டியிலும் அறிமுகம் ஆனார். இதன் மூலம் ஒரே மைதானத்தில் இரண்டு வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 8-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

* இந்திய அணியில் 3-வது, 4-வது வரிசை துடுப்பாட்டவீரர்கள் முதல் இன்னிங்சில் சதத்தை பெற்றது கடந்த 9 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2007-ம் ஆண்டு டாக்காவில் நடந்த பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் ராகுல் டிராவிட், டெண்டுல்கர் இந்த வரிசையில் சதம் கண்டிருந்தனர்.

* ஜெயந்த் யாதவ், இந்தியாவின் 286-வது டெஸ்ட் வீரர் ஆவார். விசாகப்பட்டினம் வை.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 24-வது டெஸ்ட் மைதானமாகும்.

* 28 வயதான புஜாராவுக்கு இது 10-வது செஞ்சுரியாகும். தொடர்ச்சியாக 3 டெஸ்ட் சதங்கள் அடித்ததும் அடங்கும். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 101 ரன்கள் விளாசிய புஜாரா, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 124 ஒட்டங்கள் குவித்தார். இப்போது மறுபடியும் சதம் அடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா, விஜய் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் ஓட்டங்களை எட்டினர். இதுவரை 40 டெஸ்டில் பங்கேற்றுள்ள புஜாரா அதில் 67 இன்னிங்சில் களம் இறங்கி 3,116 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். அதிவேகமாக 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இந்தியர்களின் வரிசையில் டெண்டுல்கர், டிராவிட் ஆகியோருடன் 5-வது இடத்தை பகிர்ந்துள்ளார். விஜய் 75 இன்னிங்சில் 3 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். 3 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்த இந்தியர் என்ற சாதனை ஷேவாக் (55 இன்னிங்ஸ்) வசம் உள்ளது.

65col113844245_5022876_18112016_aff_cmy

Related posts: