6வது முறையாக “நொக்-அவுட்” வெற்றி: தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் விஜேந்தர் சிங்!6வது முறையாக “நொக்-அவுட்” வெற்றி: தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் விஜேந்தர் சிங்!

Sunday, May 15th, 2016
இந்திய வீரர் விஜேந்தர் சிங் தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்த போட்டியில் அவர் போலந்து வீரர் ஆண்ட்ரெஜ் சோல்ட்ராவை சந்தித்தார்.
இந்தப் போட்டியில் விஜேந்தர் சிங்கின் சரமாரி குத்துக்களை சமாளிக்க முடியாத அனுபவ வீரரான சோல்ட்ரா 3வது சுற்றிலேயே தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதன் மூலம் விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக 6 முறையாக நாக் அவுட் வெற்றியை பெற்றுள்ளார்.
டெல்லியில் அடுத்தப் போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார். ஆனால் இன்னும் எதிராளியை முடிவு செய்யவில்லை.

Related posts: